Friday, April 20, 2007

என் பெயர் - மருதாயி - இன்குலாப்

என் பெயர் - மருதாயி - இன்குலாப் -


ஆன்ற தமிழ்ச் சான்றோரே!
தொல்காப்பியம்
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி
கம்ப இராமாயணம்
பொ¢யபுராணம்
மறந்து விட்டேன் -
திருக்குறள்

எல்லாவற்றிலும் சுட்டப்பட்டவள் நான்
தாய்மொழி - தமிழ்
பெயர் - மருதாயி
தொழில் - பரத்தை

என்னைக் கடைமகள் எனலாம்..
மதுரையைக் கொளுத்திய
கற்பரசியே -
தலையாய கற்பினள் அல்லள்!

உங்கள்
மூத்த தமிழ் அளவுகோலில்..
கற்புத் தோன்றிய அன்றைக்கே
நானும் தோன்றிவிட்டேன் !

அய்யா
ஆன்ற தமிழ்ச் சான்றோரே!
என்னிடம் முதலில் வந்தவன்
உங்கள் கொள்ளுப் பாட்டன்..
இப்பொழுது
வந்து போனவன்
கொள்ளுப் பேரன்!

என்றாலும்
பாட்டன் எதிர்பார்த்தான் பாட்டியிடம்
"பெய்யெனப் பெய்ய"
தன் சடலம் எ¡¢யும் போது
உடன்வேக..
பாட்டி ஒருபோதும்
பாட்டனிடம் கேட்கவில்லை
"பெய்யெனச் சொல்லுக
உடன் வேக"

இருக்கையில் சில சமயங்களிலும்
போகையில் சில சமயங்களிலும்
பாட்டி
தன் தங்கையைத் தாரமாக்குவாள்

இல்லாவிடினும் இவன் மேய்வான்..
பத்தினியைப் பறிகொடுத்த
பாட்டனுக்கு
மச்சினியைக் கைப்பிடித்த
ஆறுதல்..

இல்லத்தரசி இருக்க என்னிடம் வந்தவனுக்கும்
மனைவி இருக்க மச்சினியைப் பிடித்தவனுக்கும்
ஒரு கீறலும் இல்லை கற்பில்..

தமிழ்க் குடும்பம் புனிதமானது!
தமிழ்ச் சமூகம் காலகாலமாய்க்
கற்புடையது.!

விரும்பியவனைச் சேர்வது
கற்பாகாது.
கட்டியவனை ஒப்புவதுதான்
கற்பாகும்..

கட்டியவன் முகமன்றி
வேறு முகம் கூடாது
காண.
கட்டியவன் நிழலன்றி
வேறு நிழலில்லை
பட.

அய்யா! அன்றதமிழ்ச் சான்றோரே!
கற்பரசி நினையாவிடினும்
கண்டவன் அவளை நினைத்தால்
அவள் கற்புக்கரசி ஆகமாட்டாள்..
கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார்..

தமிழ்நாட்டுக் குரங்கும் மீனும்
கற்புடையவைதாம்.

கைம்மை உய்யாக் காமர் மந்தி
ஓங்குமலை அடுக்கத்துப்
பாய்ந்து
உயிர் செகுக்கும்.

தன்கணவன்மீன் அல்லாத
வேறு ஆண்மீனைத் தொடநேர்ந்த
மனைவிமீனை
வெட்கம் பிடுங்கித் தின்னும்..
தற்கொலை செய்ததோ
என்னவோ
தண்ணீ¡¢ல்..

உடன் கட்டை ஏறிய
பத்தினிப் பெண்ணைப்
பாராட்டாத
தமிழ் எழுத்தில்லை.
பொ¢யார் எழுத்தைத் தவிர.

பாவாடையும் சேலையுந்தான்
தமிழ்ப் பண்பாடு..
சு¡¢தாரும் பேண்டும்
கவர்ச்சிக் கண்றாவி!
மொபட் ஓட்ட பேண்டுதான் வசதியா?
மொபட் ஓட்டாதே..
படைநடை பயிலாதே..
தமிழ்ப் பெண் அடக்கமானவள்..
ஆறடிக் கூந்தல் இன்னுமோர்
அடையாளம்.

கூந்தல்வார நேரமில்லையா?
மூக்கடைப்பு நோய்த் தொலலையா?

கூந்தலைக் குறைக்காதே
தமிழ் குறைந்து போய்விடும்!

ஒருவனுக்கு உண்மையாய்
இருப்பதே தமிழ்க் கற்பு..
அவன் கல்லானாலும் மண்ணானாலும்
கட்டியவள் ஏற்கெனவே கன்னிதானா
என்று எதிர்பார்ப்பதே
தமிழ் மரபு நியாயம்..
தமிழர் அனைவரும் உறுதி கொள்ளலாம்.

இங்கிலாந்து நடத்திய
கன்னிமைச் சோதனையை
இல்லறம் தொடங்குவோன்..
நடத்திப் பார்க்கலாம்
தேறினால் மட்டுந்தான்
பண்பாடு தேறும்..
தமிழ்க் குடும்பம் புனிதமானது..

அய்யா ஆன்றதமிழ்ச் சான்றோரே!
உங்கள் பண்பாட்டை நீங்கள் பிடித்த
காலகாலமாய் நானும் நடக்கிறேன்
கற்புத் தோன்றிய அன்றைக்கே
நானும் தோன்றிவிட்டேன் -
தாய்மொழி - தமிழ்
பெயர் - மருதாயி
தொழில் - பரத்தை !

நன்றி : சிந்தனையாளன் - பொங்கல் சிறப்பு மலர் 2006

7 comments:

Sanjay Antony-Babu said...

Wonderful post. Was wondering if you would mind me using the photograph of Kavignar Ingulab for the article on him.
http://en.wikipedia.org/wiki/Kavignar_Inkulab
Thanks

ஜமாலன் said...

தோழர் இன்குலாப் அவர்களின் பதிவு பக்கத்திற்க்கு

மனுசங்கடா? நாங்க மனுசங்கடா?

என்று தலைப்பிட்டிருக்கலாம். அந்த புரட்சிகரப்பாடலை 85-களில் ஒவ்வொரு கிராமங்களிலும் எங்கள் மாணவர் சங்க கலைக்குழு பாடி பிரச்சாரம் செய்துள்ளோம். அத்தனை எழுச்சியூட்டும் பாடல் அது. மக்கள் கவிஞர் என்றால் அது இன்குலாப்தான்.

பதிவிற்கு வாழ்த்துக்கள். தவிரவும் இப்பொழுதுதான் உங்கள் பதிவ பார்க்க கிடைத்தது.

அகநாழிகை said...

மிக சிறப்பான பதிவு!

இளங்குமரன் said...

எழும்பும் சதையும் நீங்க வச்ச தீயில் வேகுது
உங்க சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணெய ஊத்துது
எதையெதையோ சலுகையினு அறிவிக்கிறீங்க
நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப்போல அவனப்போல எட்டுசாணு உசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா//

அப்பப்பா இந்தப் பாடலை மறக்க முடியுமா? ஜமலான் நினைவு படுத்தியமைக்கு நன்றி.

சூரியனைச் சுமப்பவர்கள் என்ற அவரின் கவிதைத் தொகுதியே என் பட்டப்படிப்பு ஆய்வுக்கு எடுத்தேன்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

மதுரக்காரி said...

உண்மை தான்.... அதான் வலிக்குது.....